5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தைப் புகழ்ந்த நடிகர் நாகர்ஜூனா

படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தைப் பார்த்த பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனா தெலுங்கு மொழியில் வெளியான ‘சத்யம் சுந்தரம்’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்து பேசியுள்ள நாகர்ஜூனா,

கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தைப் புகழ்ந்த நடிகர் நாகர்ஜூனா
நாகர்ஜூனா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Oct 2024 19:26 PM

நடிகர்கள் காத்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தைப் பார்த்த நடிகர் நாகர்ஜூனா வெகுவாகப் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான நிலையில் படத்தைப் தெலுங்கு மொழியில் பார்த்த நடிகர் நாகர்ஜூனா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சொந்த ஊர், உறவுகள் ஆகியவற்றைப் பிரிந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு, மீண்டும் அதே ஊருக்கு திரும்புகிற ஒருவரின் பரிதவிப்பையும், மனவோட்டங்களையும் ஆழமாகப் பேசி இந்த உலகில் பலரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.

Also read… இதய ரத்த நாளத்தில் வீக்கம்… ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை

தஞ்சாவூரில் இருக்கும் நீடாமங்கலம் என்ற கிராமத்தில் பூர்வீக வீட்டில் குடியிருக்கும் பதின் வயது அரவிந்தசாமி சொத்து தகராறு காரணமாக அவர்கள் வீடு அவரின் அத்தை குடும்பத்திற்கு கை மாறி விட பின்பு தனது அப்பா மற்றும் அம்மா என மொத்த குடும்பமும் தஞ்சாவூரை காலி செய்துவிட்டு சென்னைக்கு குடியேறுகின்றனர். 22 வருடங்களுக்கு பிறகு அரவிந்தசாமியின் சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக மீண்டும் தஞ்சாவூருக்கு வருகிறார் அரவிந்தசாமி. வந்த இடத்தில் ஒரு சம்பிரதாயத்திற்காக திருமணத்தில் தலை காட்டி விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்பி வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் அரவிந்தசாமியை அவரது உறவுக்காரரான பெயர் தெரியாத கார்த்தி விழுந்து விழுந்து கவனிக்கிறார். அரவிந்தசாமி நிழல் போல் கூடவே இருந்து கொண்டு அவரை அத்தான்… அத்தான்… என அன்பு தொல்லை கொடுக்கிறார். ஆனால் கார்த்தியை யார் என்று அரவிந்த்சாமிக்கு சுத்தமாக ஞாபகம் வரவில்லை. அவரும் மற்றவர்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்தபோதும் கார்த்தி தனக்கு எந்த முறையில் உறவு என அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

உள்ளூரில் குடிகாரனுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட முறைப்பெண் ‘நான் உன்னையே கட்டியிருக்கலாம்’ என்று ஏக்கத்தோடு அரவிந்த்சாமியிடம் சொல்வது, தங்கையான கல்யாணப் பெண், அண்ணன் அரவிந்த்சாமி கொண்டுவந்த ‘கிஃப்டை’ மேடையிலேயே பிரித்து அணிந்து கொள்ளும் பாசம், பல வருடங்கள் கழித்து வந்திருக்கிற அத்தானை ஏமாற்றி, ஒரு நாள் இரவு தங்க வைத்து விடுகிற மாப்பிள்ளையின் மகிழ்ச்சி என எல்லா படங்களிலும் இறுதியில் அழ வைக்கும் காட்சி இந்தப் படத்தில் ஆரம்பத்திலேயே ரசிகர்களை அழவைத்து எமோஷனலாகவும் கார்த்தியின் நகைச்சுவையில் கலகலப்பாவும் செல்கிறது படம்.

Also read… அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா

படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தைப் பார்த்த பிரபலங்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனா தெலுங்கு மொழியில் வெளியான ‘சத்யம் சுந்தரம்’ படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் படம் குறித்து பேசியுள்ள நாகர்ஜூனா, அன்புள்ள கார்த்தி, நான் உங்களுடைய சத்யம்சுந்தரம் படத்தை நேற்றைய இரவு பார்த்தேன். நீங்களும், அரவிந்த்சாமியும் மிகமிக நன்றாக நடித்து இருக்கிறீர்காள். படம் பார்க்கும் முடியும் வரை எனக்கு முகத்தில் சிரிப்பு இருந்து கொண்டே இருந்தது. நான் படுக்கைக்கு செல்லும் போதும் அதே சிரிப்போடு சென்றேன். எனக்கு என்னுடைய குழந்தை பருவ நினைவுகள் அனைத்தும் வந்து சென்றன. நாம் இருவரும் இணைந்து நடித்த ‘தோழா’ திரைப்பட நினைவுகளும் வந்தன. மக்களும், விமர்சகர்களும் இந்தப்படத்தை பாராட்டுவதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் நாகர்ஜூனா தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்திலும் தனுஷின் குபேரா படத்திலும் தற்போது நடித்து வருவது குறிப்பிடதக்கது.

Latest News