’இட்லி கடை’ படத்தில் தனுஷின் லுக் இதுதானா? இணையத்தில் கசிந்த போட்டோ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் தனுஷ் தற்போது தனது 52-வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும் டான் பிசர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் கடைக்குட்டி மகனாக 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்தவர் நடிகர் தனுஷ். வெங்கடேஷ் பிரபுவான இவரை நடிகர் தனுஷ் என மாற்றியது அவரது அண்ணன் இயக்குநர் செல்வராகவன் தான். கடந்த 2002-ம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ படம் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமானார்.
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானபோது ஒல்லியான உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று பல கேலிகளுக்கு ஆளான ஒருவர் ஹாலிவுட் வரை பிரபலமானது பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இரண்டாவதே தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படம் தனுஷை தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகராக பதியவைத்தது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனைத்து படங்களும் ஹிட் அடித்த நிலையில் அதனை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் வெற்றி மாறன் உடன் கூட்டணி வைத்தார். இந்த இரண்டு கூட்டணிகளும் தனுஷின் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டும் இன்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
Also read… கவனம் பெரும் புதுமண தம்பதிகள் ரம்யா பாண்டியன் – லவ்ல் போட்டோஸ்
படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நீண்ட காலங்கள் தனுஷ் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கினார் தனுஷ். தனது 50-வது படமான அதை இயக்கி நடித்து இருந்தார் தனுஷ். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது தனது 52-வது படமான ‘இட்லி கடை’-யை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சுற்றி நடைப்பெற்று வருகின்றது. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைப்பெற்று வருகின்றது.
#IdlyKadai New Look of #Dhanush🤩🔥
Young clean shave look👌 pic.twitter.com/1nK6nO4k0E— AmuthaBharathi (@CinemaWithAB) November 30, 2024
இந்த நிலையில் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் தனுஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த போட்டோவில் தனுஷ் மிகவும் இளமையாக தோற்றமளிக்கிறார்.