Pushpa 2 : ஒருபோதும் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்.. நடிகர் அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்..
Allu Arjun: தெலுங்கு திரைப்படங்களில்தான் அருமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பில் வெளியாகத் தயாராகி உள்ள இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வருகின்ற டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைப்பாடுகள் பிரமாதமாக நடந்து வருகிறது.
டோலிவுட் பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா : தி ரூல். இவரின் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா பாகம் 1ன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் புஷ்பா தி ரூல் என்ற இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் ஃபஹத் பாசில் , ஜெகபதி பாபு , தனஞ்சயா , ராவ் ரமேஷ் மற்றும் சுனில் போன்ற முன்னணி பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். அல்லு அர்ஜுனின் முன்னணி நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாகத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் தற்போது புஷ்பா தி ரூல் திரைப்படத்திலும் இவரேதான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருவதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. நேற்று மும்பையில் நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:இணையத்தில் கவனம்பெறும் நயன்தாராவின் ‘KARMA SAYS’ இன்ஸ்டா ஸ்டோரி
நடிகர் அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்…!
தற்போது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸிற்கு தயாராகிவருகின்ற நிலையில் பல இடங்களில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் நேற்று மும்பையில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அல்லு அர்ஜுன். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத உடனான பழைய உரையாடலைக் கூறினார்.
அந்த உரையாடலைக் குறித்துத் தெரிவித்த அவர் ஒருமுறை தேவி ஸ்ரீ பிரசாத்திடம் நீங்க என் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கக் கூடாது என்று கேட்டேன் அதற்கு அவரோ பதிலுக்கு நீங்கள் ஏன் இந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை? என்றும் நீங்கள் இந்தி திரைப்படங்களில் நடித்தால் நானும் உங்களுடன் இந்தி திரைப்படங்களில் இசையமைக்க ஆரம்பித்துவிடுவேன் என்று கூறினார்.
அதற்கு நான் ஒருபோது இந்தி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்றும், நான் நடிக்க வரும்போது பாலிவுட் சினிமாவில் நுழைவதற்கு மிகக் கடினமாக இருந்தது என்றும் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் ஓப்பானாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க:கோலாகலமாக ஆரம்பித்த நாக சைதன்யா-சோபிதாவின் திருமண கொண்டாட்டம்!
நடிகர் அல்லு அர்ஜுன் பிரம்மாண்ட வெற்றிக்கான காரணம்…
டோலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகராகக் கலக்கி வரும் நடிகர் அல்லு அர்ஜுன் 2003ம் ஆண்டு தெலுங்கு ப்ரோமோஷன் கே.ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெளியான “கங்கோத்ரி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
தொடர்ந்து திரைப்படங்களில் ஆணாதிக்க ஆரம்பித்த இவருக்கு இயக்குநர் சுகுமாரின் “கிளாசிக் ஆர்யா” என்ற திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் மூலமே அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் சுகுமாரின் காமினேஷனில் வந்த திரைப்படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க:லக்கி பாஸ்கர் டூ பிரதர் வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
டோலிவுட் திரைப்படங்களில் டாப் 10 நடிகர்களில் இருந்து வந்த அல்லு அர்ஜுனிற்குப் பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது புஷ்பா தி ரைஸ். இப்படம் வெளியாக்குவதற்கு முன் அந்த அளவிற்குக் கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் தற்போது அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னாள் வட இந்தியாவில் பண்டிகையைப் போலக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ 350 முதல் ரூ 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் இந்த திரைப்படமானது தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. இப்படத்திலிருந்து வெளியான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அனைத்து பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னே ப்ரீ புங்கிங்கில் தற்போதுவரை பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இவ்வாறு வெகு பிரம்மாண்ட வரவேற்பை பெரும் இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: விடாமுயற்சி தீம் மியூசிக்.. டீசரில் வந்த ‘கடவுளே.. அஜித்தே’ இதை கவனிச்சீங்களா?