5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

The GOAT: முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து.. கோட் பட ரிலீஸில் சம்பவம் செய்த அஜித்!

AjithKumar: மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில், ஒரு நேர்காணலில், “விஜய்யை வைத்து எப்போது படம் பண்ணப் போகிறாய்” என அஜித் அடிக்கடி கேட்பார் எனவும், “ சீக்கிரமே படம் இயக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும், “படத்தின் ட்ரைலர் பார்த்துவிட்டு கண்டிப்பாக இந்த படம் மங்காத்தாவை விட நூறு மடங்கு சிறப்பானதாக இருக்கும்” என வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.

The GOAT: முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து.. கோட் பட ரிலீஸில் சம்பவம் செய்த அஜித்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 05 Sep 2024 08:12 AM

தி கோட்: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படம் இன்று வெளியான நிலையில், அவருக்கு முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், “நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக விஜய்க்கும், கோட்பட குழுவினருக்கும், எனக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இதே போல் இயக்குனர் பா.ரஞ்சித், “தனது குருநாதரான வெங்கட் பிரபுவுக்கும், நடிகர் விஜய்க்கும் கோட் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேசமயம் இயக்குனர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், “எல்லா முரண்பாடுகளையும் எதிர்கொண்டு கோட் பணம் வளர்ந்த விதம் ஊக்கம் அளிக்கிறது. இது இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து தெரிவித்தது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: Vijayakanth: மீண்டும் திரையில் வந்த கேப்டன் விஜயகாந்த்.. கண்கலங்கிய ரசிகர்கள்!

ஏற்கனவே சினிமாவில் போட்டியாளராக கருதப்படும் அஜித், விஜய் இருவரும் திரைக்குப் பின்னால் நல்ல நண்பர்கள் என்பதை பல முன்னணி பிரபலங்களும் நேர்காணலில் தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் கோட் பட ட்ரெய்லரில் மங்காத்தா படத்தில் அஜித் பேசும் வசனம் ஒன்றை விஜய் பேசுவது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது.

மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில், ஒரு நேர்காணலில், “விஜய்யை வைத்து எப்போது படம் பண்ணப் போகிறாய்” என அஜித் அடிக்கடி கேட்பார் எனவும், “ சீக்கிரமே படம் இயக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்ததாக குறிப்பிட்டார். மேலும், “படத்தின் ட்ரைலர் பார்த்துவிட்டு கண்டிப்பாக இந்த படம் மங்காத்தாவை விட நூறு மடங்கு சிறப்பானதாக இருக்கும்” என வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லது அஜித் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Thalapathy Vijay: விஜய் பேச்சுக்கு அவ்வளவு தான் மதிப்பா? – ரசிகர்கள் செயலால் அதிருப்தி!

முன்னதாக நடிகர் விஜய் நடித்துள்ள The Greatest Of All Time படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் பல மாநிலங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் விடிய விடிய ஈடுபட்டனர். படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாகவும், முதல் காட்சி பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News