5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vidaa Muyarchi: விடாமுயற்சி டீசர்.. விடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் ட்விஸ்ட்!

VidaaMuyarchi Teaser: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் விடா முயற்சி. இதில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Vidaa Muyarchi: விடாமுயற்சி டீசர்.. விடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் ட்விஸ்ட்!
விடாமுயற்சி டீசர் காட்சிகள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Nov 2024 10:08 AM

நடிகர் அஜித்குமார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் ஒரு வழியாக நேற்றிரவு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என ஏகப்பட்ட பேர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. டைட்டில் எல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையில் கதை முழுவதுமாக முடிக்கப்படாதது உள்ளிட்ட சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று சில மாதங்களுக்கு முன் தான் நிறைவடைந்தது. இதனிடையே நேற்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு 11.08 மணிக்கு விடாயற்சி படத்தின் டீசர் சர்ப்ரைஸ் ஆக வெளியானது. இதற்காக தானே இத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம் என்பது போல ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் விடிய விடிய டீசரை கொண்டாடி தீர்த்து விட்டனர். அந்த அளவுக்கு மாஸாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டீசரில் “எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது படத்தின் கதையை சொல்லாமல் சொல்லியுள்ளது.

Also Read:  கேம் சேஞ்சர்  படத்திலிருந்து  லைரானா  பாடலின் லிரிக்கள் வீடியோ இதோ!

விடாமுயற்சி உருவான வரலாறு

கடந்த 2023 ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில் அவரின் எந்த படமும் வெளியாவதால் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் இருந்தனர். அதே சமயம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்ததால் கடும் அதிருப்தி அடைந்தனர்.

அஜர்பைஜான் நாட்டில் தான் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடைவெளியில் நடிகர் அஜித் பைக்கில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்றதும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இப்படியான நிலையில் தான் அஜித்துக்குப் பிறகு கடந்த ஆண்டில் படம் நடித்த ரஜினி,விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் தங்களது இரண்டாவது படங்களையே இந்த 2 ஆண்டுகளில் வெளியிட்டு விட்டனர். இப்படியான நிலையில் விடாமுயற்சி என்னும் படம் வெளி வருமா, என்னதான் அதற்கு பிரச்சினை என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி தவித்தனர்.

Also Read:  ”எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு”… அஜித்தின் விடாமுயற்சி டீசர் இதோ

அதேசமயம் நடிகர் அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என உறுதியாக அறிவிக்கப்பட்டதால் விடாமுயற்சி படத்திற்கு என்ன ஆச்சு என மீண்டும் பேச்சு எழுந்தது.. இந்த நிலையில் தான் ஆச்சரியமளிக்கும் விதமாக விடாமுயற்சி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குநர்கள் ஷங்கரின் கேம் சேஞ்சர் மற்றும் பாலாவின் வணங்கான் ஆகிய படங்கள் பொங்கல் ரிலீஸை உறுதி செய்துள்ள நிலையில் விடாமுயற்சி படமும் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வாசம், துணிவு ஆகிய படங்களுக்கு பிறகு 2 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அஜித் படம் பொங்கலுக்கு வெளியாவது பண்டிகையை இப்போதே கொண்டாடும் மோடுக்கு ரசிகர்களை மாற்றியுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தற்போது மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News