UGC NET Exam 2024: யுஜிசி நெட் மறுதேர்வு தேதிகள் அறிவிப்பு.. முழு அட்டவணை இதோ!
முறைகேடு புகார்கள் காரணமாக யுஜிசி நெட் தேர்வு ரத்த செய்யப்பட்ட நிலையில், தற்போது மறு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 83 பாடங்களுக்கான தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு: முறைகேடு புகார்கள் காரணமாக யுஜிசி நெட் தேர்வு ரத்த செய்யப்பட்ட நிலையில், தற்போது மறு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நெட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர நெட் தேர்வு எனும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அதேபோல, இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகையை பெற நெட் தேர்வு கட்டாயம் ஆகும். மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணிணி மூலம் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு தேசியத் தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தகுதித் தேர்வு ஜூன் மற்றும டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான நேரடி எழுத்துத்தேர்வு முறை கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் 317 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 1,205 தேர்வு மையங்களில் இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டது. இதில், 9.08 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, கடந்த 18ஆம் தேதி நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
Also Read: மாணவர்களே ரெடியா.. ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்!
எந்தெந்த நாட்களில் தேர்வு:
இந்த நிலையில், நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 83 பாடங்களுக்கான தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இரண்டு ஷிப்டகளாக ஆகஸ்ட் 21,22,23,26,28,29,30 மற்றும் செப்டம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. எந்தெந்த பாடங்களுக்கு எப்போது தேர்வு என்பதை https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். தேர்வு மையம் அமைந்திருக்கும் நகரம் மற்றும் அட்மிட் கார்டு விரைவில் தேசிய தேர்வை முகமை இணையத்தில் வெளியிடும்.