5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Goverment: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு.. யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
மாணவர்கள் (Photo Credit: Getty)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 20 Sep 2024 14:37 PM

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500ஆகவும் உயர்த்தி வழங்கினார். அத்துடன், தற்போது, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையையும் உயர்த்தி அவர்கள் ஊக்கமுடன் கல்வி கற்க உதவி செய்துள்ளார். அதாவது, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு:

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

Also Read: சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேலும், தொழிற்கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி ஊக்கத் தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்து 4.7.2023 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை:

பள்ளி, கல்லூரி படிப்புகளுடன், மாற்றுத் திறனாளி மாணவ- மாணவியர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளிலும் ஈடுபட வேண்டும் என்னும் விழைவோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின்கீழ் தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் 50 மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10.9.2024 அன்று ஆணையிட்டுள்ளார்.

Also Read: ரூ.14,000 கடனை திருப்பி தராததால் ஆத்திரம்.. நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்.. பகீர் சம்பவம்!

பள்ளி, கல்லூரி படிப்புகளுடன் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களின் படிப்பு நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக ஆராய்ச்சிப் படிப்புகளில் ஈடுபட வேண்டும் என்னும் விழையோடு ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கமளிப்பதற்காக அவர்கள் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 50 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Latest News