NEET UG Counselling 2024: இளநிலை மருத்துவ படிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
நாடு முழுவதும் உள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1,10,000 எம்பிபிஎஸ் இடங்களும், 21,000 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ள நிலையில், இதில் 1,650க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக கலந்தாய்வை நடத்தும் நிலையில், இளநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவித்திருந்தது.
மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம்: 2024 – 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆகஸ்டு 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்திருந்தது. அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (ஆகஸ்ட் 9 ஆம் தேதி) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதியும், மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதியும் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2 வது வாரத்தில் தரவரிசைப்பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தேதியை தேசிய மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநில அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் கலந்தாய்வு தனிதனியாக நடைபெற்று வருகிறது.
Also Read: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?
நாடு முழுவதும் உள்ள 710 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1,10,000 எம்பிபிஎஸ் இடங்களும், 21,000 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ள நிலையில், இதில் 1,650க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக கலந்தாய்வை நடத்தும் நிலையில், இளநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவித்திருந்தது.
அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கு என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இடங்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. அகில இந்திய இடங்களுக்கு 2ஆம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3ஆம் சுற்று மருத்துவ கலந்தாய்வு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: தமிழ் புதல்வன் திட்டம்.. கோவையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..
இதற்கிடையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்ப்போது அதனை நீடித்து மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று (ஆகஸ்ட் 9 ஆம் தேதி) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.