5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

NEET PG Paper Leak: நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மத்திய அரசு பரபர விளக்கம்!

ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஷிப்டு விவரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நீட் முதுகலை வினாத்தாள்கள் வெளியாகியதாக தகவல்கள் பரவி வருகிறது. 70 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவின. இது தொடர்பான வாட்ஸ் அப், டெலிகிராம் பக்கங்களில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டுகளை சிலர் தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

NEET PG Paper Leak: நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மத்திய அரசு பரபர விளக்கம்!
நீட் தேர்வு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 07 Aug 2024 20:15 PM

நீட் முதுகலைத் தேர்வு வினாத்தாள்: ஆகஸ்ட் 11ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஷிப்டு விவரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நீட் முதுகலை வினாத்தாள்கள் வெளியாகியதாக தகவல்கள் பரவி வருகிறது. 70 ஆயிரம் ரூபாய்க்கு வினாத்தாள் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவின. இது தொடர்பான வாட்ஸ் அப், டெலிகிராம் பக்கங்களில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டுகளை சிலர் தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. நீட் வினாத்தாள் கசியவிடப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. வினாத்தாள் குறித்து வாட்ஸ் அப் செயலியில் வெளிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. வரும் 11ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததான தகவல் தவறாவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Also Read: போலியாக பேராசிரியர் கணக்கு காட்டிய கல்லூரிகள்.. இரண்டு நாட்களில் நடவடிக்கை – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..

நீட் முதுகலைத் தேர்வு:

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்கள் எம்.டி, எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுநிலை தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்கள், மத்திய அரசு கல்லி நிறவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்.டி, எம்.எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கு மொத்தம் 42,500 இடங்கள் உள்ளன.அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், தேர்வுக்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Also Read: ஆயுஷ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா?

இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள்மாற்றம், கருணை மதிப்பெண் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நீட் முதுகலை தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் எனவும் இரண்டு ஷிப்ட்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியாக உள்ளது.

 

 

Latest News