5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ayush Course Admission: ஆயுஷ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா?

2024-25ஆம் ஆண்டுக்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

Ayush Course Admission: ஆயுஷ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… எப்படி தெரியுமா?
ஆயுஷ் படிப்புகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Aug 2024 08:34 AM

ஆயுஷ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: 2024-25ஆம் ஆண்டுக்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுடே பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ். பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும்.  சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி பட்டப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிற. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, நெல்லை பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இடங்கள் உள்ளன.

Also Read: மாணவர்களே ரெடியா.. ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்!

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்களுக்கு மாநலி அரசுக்கு உள்ளது. மேலும், 30 தனியார் கல்லூரிககளில் உள்ள 1980 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டும் உள்ளன.

இந்தநிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் வரும் 27ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம், ஒமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம் சென்னை – 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Also Read: யுஜிசி நெட் மறுதேர்வு தேதிகள் அறிவிப்பு.. முழு அட்டவணை இதோ!

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்பிஐ இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். கடைசி தேதிக்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால், கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது என்று இந்திய மருத்துவ ஓமியோபதித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Latest News