5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Anna University : பொறியியல் தேர்வு கட்டண உயர்வு வாபஸ்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

Anna University | இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் தாளுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் தாளுக்கு ரூ.450-ல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இளநிலை படிப்புகளுக்கான ஆய்வறிக்கை கட்டணம் தாளுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Anna University : பொறியியல் தேர்வு கட்டண உயர்வு வாபஸ்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!
அண்ணா பல்கலைக்கழகம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 31 Aug 2024 11:33 AM

பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் உயர்வு : பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் தாளுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டணம் தாளுக்கு ரூ.450-ல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர இளநிலை படிப்புகளுக்கான ஆய்வறிக்கை கட்டணம் தாளுக்கு ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல பட்டச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சான்றிதழ்களை டிஜிலாக்கரில் பதிவேற்றம்ச் செய்வதற்கான கட்டணமும் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என கூறியிருந்தது.

இதையும் படிங்க : Telegram : நாட்டை விட்டு வெளியேற தடை.. ரூ.46 கோடி பிணைத்தொகை.. கடும் நெருக்கடியில் டெலிகிராம் CEO!

தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்த அமைச்சர் பொன்முடி

இந்நிலையில்  பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் 50% ஆக உயர்த்தப்பட்ட முடிவு நிறுத்தி வைக்கபபடுவதாக தெரிவித்தார். மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டும் இந்த கட்டணன்  உயர்வு அமல்படுத்த படாது என்றும் சிண்டிகேட் முடிவெடுக்கும் வரை கட்டண உயர்வில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : Vande Bharat: அப்படி போடு..! தமிழகத்திற்கு இன்று முதல் மேலும் 2 வந்தே பாரத் ரயில்.. எந்த வழிதடங்களில் தெரியுமா?

அனைத்து கட்டண உயர்வும் வாபஸ் – அண்ணா பல்கலைக்கழகம்

தற்போது தேர்வு கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்து கட்டண உயர்வும் வாபஸ் பெறப்படுவதாகவும், மாணவர்களிடம் பழை கட்டணங்கள்தான் வசூலிக்க வேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில் கூறியிருப்பதாவது, தேர்வுகட்டணம், சான்றிதழ் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களின் உயர்வும் திரும்பப்பெறபப்டுகிறது. எனவே அனைத்து பொறியியல் கல்லூரிகளும் முன்பு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களையே மாணவர்களிடம் வசூலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold Price August 31 2024: வார இறுதி நாள்.. குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News