5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PPF : மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.6.50 லட்சம் வரை வருமான ஈட்டலாம்.. பிபிஎஃப் முதலீடு!

PPF Scheme | அடிக்கடி உயரும் விலை வாசியின் காரணமாக, பாதுகாப்பான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு பொதுமக்கள் சேமிக்க சிறந்த திட்டம் தான் பிபிஎஃப். பொதுமக்கள் பிபிஎஃப்பில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான  வருமானத்தை பெற முடியும். 

PPF : மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.6.50 லட்சம் வரை வருமான ஈட்டலாம்.. பிபிஎஃப் முதலீடு!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 24 Aug 2024 21:02 PM

பிபிஎஃப் முதலீடு : எதிர்காலத்தை குறித்த பயம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தான் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அடிக்கடி உயரும் விலை வாசியின் காரணமாக, பாதுகாப்பான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு பொதுமக்கள் சேமிக்க சிறந்த திட்டம் தான் பிபிஎஃப். பொதுமக்கள் பிபிஎஃப்பில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான  வருமானத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : Post Office FD : ரூ.5 லட்சம் செலுத்தி ரூ.10,00,000 பெறலாம்.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!

7.1% வரை வட்டி வழங்கப்படுகிறது

பிபிஎஃப் முதலீட்டை பொறுத்தவரை நீங்கள் வெறும் ரூ.500-ல் இருந்து முதலீட்டை தொடங்கலாம். இந்த முதலீட்டின் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. இந்த திட்டத்தில் சிறந்த வட்டி வழங்கப்படுவதால், நிலையான வருமான கிடைக்க வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தில் வட்டி விகிதம் மட்டுமன்றி முதிர்ச்சி தொகையும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் முதலீடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃபின் சிறப்பு அம்சங்கள் என்ன?

  • பிபிஎஃபில் நீங்கள் ரூ.500 முதல் முதலீடு செய்ய தொடங்கலாம்.
  • நீங்கள் பழைய வரி முறையை தேர்வு செய்து முதலீடு செய்தால், திட்டம் முதிர்ச்சி அடைந்து தொகையை திரும்ப பெறும் போது வருமான வரி சட்டம் 80c பிரிவின்படி, நீங்கள் வருமான வரி விலக்கையும் பெற்லாம்.
  • இதில் நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் ஒரு ஆண்டுக்கு குறைந்தது ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
  • அவ்வாறு இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், திட்டம் முதிர்ச்சியடைய 15 வருடங்கள் ஆகும்.
  • ஒருவேளை நீங்கள் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று நினைத்தால் திட்டம் முடிவடைந்ததற்கு பிறகு, 2 முறை நீடித்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.
  • இந்த திட்டத்தில் நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் முதலீடு செய்யலாம்.
  • நீங்கள் ஆஃப்லைனில் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்கள் வீட்டின் அருகில் உள்ள வங்கி அல்லது அஞ்சலகத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி முதலீடு செய்யலாம்.
  • இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.24,000 சேமிப்பீர்கள். இந்நிலையில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் வட்டியுடன் சேர்த்து ரூ.6,50,000 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Provident Fund : ஆன்லைனில் பிஎஃப் பணத்தை க்ளெய்ம் செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News