5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

POMIS : மாதம் ரூ.5,000 வருமானம்.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

Post Office Scheme | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் பாதுகாப்பானதாக இருப்பது மட்டுமன்றி சிறந்த வருமானம் பெற உதவுவதால் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் அத்தகைய அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம். 

POMIS : மாதம் ரூ.5,000 வருமானம்.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 27 Aug 2024 12:05 PM

அஞ்சலக சேமிப்பு திட்டம் : ஒவ்வொரு தனி மனிதருக்கும் சேமிப்பு என்பது கட்டாயம் ஆகும். சேமிப்பு இல்லை என்றால் நிதி பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே பொதுமக்கள் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சேமிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியம் ஆகும். இதற்காக தான் அரசாங்கம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முதன்மையானது தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலகங்கள் மூலம் அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் பாதுகாப்பானதாக இருப்பது மட்டுமன்றி சிறந்த வருமானம் பெற உதவுவதால் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் அத்தகைய அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம் (POMIS) :

இந்த திட்டம் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தனிநபர் அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம் ஆகும். இதுவே கூட்டு கணக்கு என்றால் ரூ.15 வரை டெபாசிட் செய்யலாம். இந்த போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்திற்கு தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலீட்டு தொகைக்கான வட்டி உங்களுக்கு வழங்கப்படும். எனவே ஒரு முறை முதலீடு செய்த பிறகு எந்த வித முதலீடும் செய்ய தேவையில்லை.

திட்டம் குறித்த மற்ற சிறப்பு அம்சங்கள் என்ன?

80C பிரிவின்படி போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்திற்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.1.50 லட்சம் வரை வரி சலுகைகள் கிடைக்கும். மாதம் மாதம் முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும். உதாரணமாக இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.8,00,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சரியாக 5 ஆண்டுகள் கழித்து மாதம் மாதம் உங்களுக்கு ரூ.4,933 வழங்கப்படும். அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த திட்டத்தின் வட்டியின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News