5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரேஷன் பொருள் வாங்க ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பித்தல் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்!

ஆதார் கார்டில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று சமூக வலைதளத்தில் வதந்து பரப்பப்பட்டு வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும்  ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ரேஷன் பொருள் வாங்க ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பித்தல் கட்டாயமா? தமிழக அரசு விளக்கம்!
ரேசன் கடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Sep 2024 10:20 AM

தமிழ்நாடு அரசு விளக்கம்: ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.  நாடு முழுவதும் ஆதார் அட்டை முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், தற்போது மொத்தம் 140 கோடியே 21 லட்சத்து 68 ஆயிரத்து 849 பேர் ஆதார் அட்டையை வ வைத்திருக்கின்றனர்.  எனவே, ஆதார் இல்லாமல் எதுவும் இயலாத நிலையல் தற்போது உள்ளது.   இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள். செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் பணம் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டியிருக்கும். இந்த நிலையில்,  ஆதார் கார்டில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று சமூக வலைதளத்தில் வதந்து பரப்பப்பட்டு வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை,  கண் கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது  தோல்வி அடையும் ரேசன் அடைத்தாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.  கைவிரல் ரேவை சரிபார்க்காத காரணத்தால் எந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மறுக்கப்படுவதில்லை.

Also Read: தமிழ்நாட்டில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை… உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க!

ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும்  ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் ஆகும்.  ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் கார்டை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

  • அதற்கு முதலில் UIDAI-ன் https://uidai.gov.in/en/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்
  • அப்போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும் அதை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து UIDAI தளத்தில் தோன்றும் பக்கத்தில் Address Update என்பதை கிளிக் செய்து அதில் Update Aadhaar Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவல்களை பதிவிட்டு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

மேற்கண்ட வழிகள் மூலம் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் உங்கள் ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News