5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FD Scheme : டிசம்பர் மாதம் முடிவடையும் FD திட்டங்கள்.. உடனே செக் பண்ணுங்க!

Interest Rate | சில வங்கிகள் செயல்படுத்தி வரும் FD திட்டங்கள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. ஒருவேளை நீங்கள் அந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முதலீடு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

FD Scheme : டிசம்பர் மாதம் முடிவடையும் FD திட்டங்கள்.. உடனே செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 29 Nov 2024 11:49 AM

FD என அழைக்கப்படும் நிலையான பைப்பு நிதி திட்டம் என்பது ஒரு வகையான முதலீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதால் பொதுமக்கள் பலரும் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஏராளமான வங்கிகள் நிலையான பைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், சில வங்கிகள் குறுகிய கால அளவீடுகளை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சில வங்கிகள் செயல்படுத்தி வரும் FD திட்டங்கள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. ஒருவேளை நீங்கள் அந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முதலீடு வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office FD : ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு 3 மடங்கு லாபம் தரும் அசத்தல் திட்டம்!

டிசம்பர் மாதம் முடிவடையும் FD திட்டங்கள்

IDBI வங்கி உட்சவ் நிலையான வைப்பு நிதி திட்டங்கள்

300 நாட்கள்

ஐடிபிஐ வங்கி 300 நாட்களுக்கான ( 1 ஆண்டுக்கும் குறைவான) நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறந்த வட்டி கொண்ட ஐடிபிஐ வங்கியின் இந்த 300 நாட்களுக்கான FD திட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

375 நாட்கள்

ஐடிபிஐ வங்கி 375 நாட்களுக்கான ( ஒரு ஆண்டு) நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறந்த வட்டி கொண்ட ஐடிபிஐ வங்கியின் இந்த 375 நாட்களுக்கான FD திட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

444 நாட்கள்

ஐடிபிஐ வங்கி சுமார் 444 நாட்களுக்கான (1.5 ஆண்டுகள்) நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.35 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு 7.85 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறந்த வட்டி கொண்ட ஐடிபிஐ வங்கியின் இந்த 444 நாட்களுக்கான FD திட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

700 நாட்கள்

ஐடிபிஐ வங்கி சுமார் 700 நாட்களுக்கான (2.5 ஆண்டுகள்) நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கு 7.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறந்த வட்டி கொண்ட ஐடிபிஐ வங்கியின் இந்த 700 நாட்களுக்கான FD திட்டம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையும் படிங்க : SBI Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, 14, 21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி நிலையான வைப்பு நிதி திட்டங்கள்

222 நாட்கள்

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 222 நாட்களுக்குக்கான ( ஒரு ஆண்டுக்கும் குறைவான) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக சுமார் 6.30 சதவீதம் வட்டி வழங்குகிறது.

333 நாட்கள்

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 333 நாட்களுக்குக்கான ( ஒரு ஆண்டுக்கும் குறைவான) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக சுமார் 7.20 சதவீதம் வட்டி வழங்குகிறது.

444 நாட்கள்

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 444 நாட்களுக்குக்கான ( 1.5 ஆண்டுகள் ) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக சுமார் 7.30 சதவீதம் வட்டி வழங்குகிறது.

555 நாட்கள்

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 555 நாட்களுக்குக்கான ( 2 ஆண்டுகளுக்கு குறைவான ) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக சுமார் 7.45 சதவீதம் வட்டி வழங்குகிறது. இது கூட்டு நிலையான வைப்பு நிதி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

777 நாட்கள்

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 777 நாட்களுக்குக்கான ( 2.5 ஆண்டுகள் ) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக சுமார் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

999 நாட்கள்

பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி 999 நாட்களுக்குக்கான ( 3 ஆண்டுகளுக்கு மேல் ) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக சுமார் 6.65 சதவீதம் வட்டி வழங்குகிறது. இது கூட்டு நிலையான வைப்பு நிதி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Personal Loan : குறைந்த வட்டியுடன் தனிநபர் கடன்.. இந்த வங்கிகளை செக் பன்ணுங்க!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News