December Changes : ஆதார் கார்டு முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. டிசம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!
Aadhaar Card | நவம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடையுள்ள நிலையில், டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை முதல் ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, பான் கார்டு, தொலைதொடர்பு உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி கடந்த நவம்பர் மாத தொடக்கத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில், நவம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடையுள்ள நிலையில், டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் மாற்றங்கள் குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Bank Holidays : டிசம்பர் மாதத்தில் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. பட்டியல் இதோ!
டிசம்பர் மாதம் வரவுள்ள மாற்றங்கள்
ஆதார் கார்டு அப்டேட்
ஆதார் கார்டு விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள டிசம்பர் 14ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிக்கவில்லை என்றால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் கட்டணத்தை தவிர்க்க தங்கள் ஆதார் கார்டு விவரங்களை வரும் டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஸ் சிலிண்டர் விலை
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையை மற்றி அமைக்கும். அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் வணிக பயன்பாட்டிற்காக கேஸ் சிலிண்டர் விலையைல் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, கடந்த மாதம், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யபடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office FD : ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு 3 மடங்கு லாபம் தரும் அசத்தல் திட்டம்!
நிலையான வைப்பு நிதி திட்டங்கள்
பல முன்னணி வங்கிகள் குறுகிய கால அளவீடுகளைக் கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சில நிலையான வைப்பு நிதி திட்டங்கள் முடிவடைய உள்ளன. எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும், இல்லையென்றால் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது.
கிரெடிட் கார்டு மாற்றங்கள்
டிஜிட்டல் கேமிங் பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்பட்ட வந்த கிரெடிட் பாயிண்ட்டுகளை வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இது டிஜிட்டல் கேமிங் துறையில் பண பரிவர்த்தனை செய்து வந்த எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் அனைவரையும் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல எஸ் பேங்க், விமானம் மற்றும் ஹோட்டல்களுக்கு வழங்கி வந்த ரிவார்டு பாயிண்களில் மாற்றம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SBI Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, 14, 21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கேஸ் சிலிண்டர், ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.