LPG Rate: அச்சச்சோ… மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
சிலிண்டர் விலை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் காலையில் விலை மாற்றம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று அக்டோபர் 1ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை:
19 கிலோ எடை கொண்ட வணிக் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்துள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,903 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலை மாற்றமின்றி ரூ.818.50 ஆக உள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து விலை மாற்றமில்லாமல் இருப்பது இல்லத்தரசிகள் நிம்மது அடைந்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வது உணவகங்கள், சிறு தொழில்கள் வரையிலான பல்வேவறு துறைகளில் கடுமையாக பாதிக்கும். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
Also Read: கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. அக்டோபர் மாதம் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 38 உயர்ந்தது. இதன் மூலம் ரூ.1,855-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், அக்டோபர் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. 48 உயர்ந்து ரூ.1,903 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.1,740, மும்பையில் ரூ.1,692.50, கொல்கத்தாவில் ரூ.1,850.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உஜ்வாலா திட்டம்:
இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண்ணிக்கை மொத்தம் 14.45 கோடியாக உள்ளது. இதில், தற்போது 10 கோடியே 55 லட்சத்து 263 பேர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 51 லட்சம் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளனர்.
இதில், 1.6 லட்சம் பேர் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை, எளிய மக்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் இணைப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் உஜ்வாலா திட்டம்.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தார். அதன்படி இந்த திட்டத்தின் மூலம் சுமார் 9.60 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read: ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை.. அதிரடி சலுகைகளை வாரி வழங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்!
அதுமட்டுமன்றி இந்த பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 வழங்கப்படுகிறது. இதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மக்கள் 600 ரூபாய்க்கு மக்கள் சிலிண்டர் வாங்கி வருகின்றனர்.
அக்டோபர் மாதத்தில் வேறு என்னென்ன மாற்றங்கள்:
பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய இனி ஆதார் பதிவு ஐடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்படுவது. மேலும், இன்று முதல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டின் லாயல்டி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய விதியின்படி, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் SmartBuy பிளாட்ஃபார்மில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்ட் பாயிண்டுகளை ரெடீம் செய்வதை, காலாண்டில் ஒரு பிராடெக்ட் என்ற அளவில் மாற்றியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் நேரடி வரி விவாத் செ விஸ்வாஸ், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் உள்ள தபால் அலுவலக சிறு சேமிப்பு கணக்குகளில் வட்டி விகிதங்கள் இன்று மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.