Fixed Deposit : FD-களுக்கு 9% வரை வட்டி.. அசத்தும் சிறு நிதி வங்கிகள்.. பட்டியல் இதோ!
Fixed Deposit | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் 10 சிறிய நிதி நிறுவன வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!
ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. 18 மாதங்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.5% வட்டி வழங்குகிறது. 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (ESAF Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது.365 நாட்கள் முதல் 1095 நாட்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. 561 நாட்கள் முதல் 1111 நாட்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.65% வட்டி வழங்குகிறது. 2 ஆண்டுகள் 2 நாட்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : FD-களுக்கு 8.05% வரை வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. 12 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. 1001 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?
உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.