5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Income Tax : நெருங்கும் காலக்கெடு.. வருமான வரி செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

IT Filing Last Date | 2023 - 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை சமர்பிப்பதற்கான காலக்கேடு ஜூலை 31, 2024 ஆகும். தனிநபர்கள் ஜூலை 31 காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் டிசம்பர் 31,2024-க்குள் தாமதமாக தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தாமதமாக வருமான வரி செலுத்து, அதற்கான விளைவுகளை சந்திப்பதற்கு பதிலாக காலக்கெடுவிற்கும் வருமான வரி செலுத்துவது சிறந்ததாக இருக்கும். 

Income Tax : நெருங்கும் காலக்கெடு.. வருமான வரி செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 27 Jul 2024 13:21 PM

வருமான வரி தாக்கல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் என்ன நடக்கு, எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை சமர்பிப்பதற்கான காலக்கேடு ஜூலை 31, 2024 ஆகும். தனிநபர்கள் ஜூலை 31 காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் டிசம்பர் 31,2024-க்குள் தாமதமாக தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தாமதமாக வருமான வரி செலுத்தி, அதற்கான விளைவுகளை சந்திப்பதற்கு பதிலாக காலக்கெடுவிற்குள் வருமான வரி செலுத்துவது சிறந்ததாக இருக்கும்.

கடைசி தேதியை தவற விடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதியை தவற விடுபவர்கள், 2024 முதல் 2025 டிசம்பர் மாதத்திற்குள் ITR தாக்கல் செய்ய வேண்டும். இதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் கூட அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதை விட தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வது சிறந்ததாகும்.

இதையும் படிங்க : Budget 2024 Tax Slabs: மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு வரி கட்டணும்? பட்ஜெட் அறிவிப்பில் வெளியான தகவல்!

புதிய வரிமுறைக்கு மாற்றப்படலாம்

வருமான வரியை காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், நீங்கள் தானாகவே புதிய வரி விதிமுறைகளுக்கு கொண்டுவரப்படுவீர்கள். அதன்படி, அந்த நிதியாண்டுக்கான பழைய வரி விதிமுறையத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை இழப்பீர்கள். மேலும் தாமதமாக வருமான வரி செலுத்துவது, புதிய வரிமுறைக்கு கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி தாக்கல் செய்யும்போது வரி முறையைத் தேர்வு செய்யும் உரிமை, வரி செலுத்துவோருக்கு உண்டு. எனவே காலக்கெடுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த வாய்ப்பை இழக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமாக வரி செலுத்துவதற்கான அபராதம்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F-ன் படி, தாமதமாக வரி தாக்கல் செய்வதற்கு கட்டணம் ரூ.5,000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், தாமதமாக IRT தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office FD : வெறும் ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.15,00,000 பெறலாம்.. அசத்தலான அஞ்சலக FD திட்டம்.. முழு விவரம் இதோ!

Latest News