Stock Market Holiday : இந்த இரண்டு நாட்களுக்கு பங்குச்சந்தை இயங்காது – ஏன் தெரியுமா?
Diwali 2024 | இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களுக்கு இந்திய பங்குச்சந்தை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடும் வகையில் தொடர் விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச்சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த இரண்டு நாட்கள் இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!
இந்திய பங்குச்சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை
இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி அதாவது தீபாவளி அன்று மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி அந்த வாரத்திற்கான ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை என்பதால் இந்த இரண்டு நாட்களும் இந்திய பங்குச்சந்தை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Bank Holidays : நவம்பர் மாதம் இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது.. லிஸ்ட் இதோ!
இந்திய பங்குச்சந்தை நிலவரம்
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு பிரச்னை ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதாவது, கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான், இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது ஈரான். இதனால் இஸ்ரேல் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது பிரச்னையை மேலும் தீவிரமடைய செய்தது.
இதையும் படிங்க : Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
இதனால் ஈரான் மீது கடும் கோபமடைந்த இஸ்ரேல், பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமன்றி ஹமாஸ் தலைவரின் கடைசி நிமிட வீடியோ காட்சிகளையும் இஸ்ரேல் வெளியிட்டிருந்தது. இது இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் போரை உச்சக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வழிவகுத்தது.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
நேற்று (அக்டோபர் 28) இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று (அக்டோபர் 29) சரிவுடன் தொடங்கியுள்ளது. அதன்படி, BSE சென்செக்ஸ் 369.17 புள்ளிகள் குறைந்து 79,635.87 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. இதேபோல நிஃப்டி 50 109.60 புள்ளிகள் குறைந்து 24,225.55 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. நேற்று (அக்டோபர் 28), வர்த்தக தொடக்கத்தில் S&P BSE சென்செக்ஸ் 343.70 புள்ளிகள் உயர்ந்து 79,745.99 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல நிஃப்டி 50 66.05 புள்ளிகள் உயர்ந்து 24,246.85 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?
ஒரே நாளின் ரூ.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதாவது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவீதம் குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்றது. அன்றைய தினத்தின் முந்தைய அமர்வில் BSE-ல் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.453.7 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதுவே அடுத்த அமர்வில் அது ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழக்கும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.