PAN Card : பான் கார்டில் தந்தை பெயர் இல்லை என்றால் செல்லாதா?.. வருமான வரித்துறை கூறுவது என்ன?
Income Tax | ஒரு தனி நபரின் பேரில் 1-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் இந்த பான் கார்டுக்கு கீழ் வந்துவிடும். அதுமட்டுமன்றி வங்கி பரிவர்த்தனைகள், வங்கி கடன் உள்ளிடவற்றையும் இந்த பான் கார்டு மூலம் எளிதாக கண்டறிய முடியும். பான் கார்டு இல்லையென்றால் வணிக ரீதியாக செய்யக்கூடிய செயல்களை செய்ய முடியாமல் போகலாம்.
பான் கார்டு குறித்து வெளியான தகவல் : PAN (Permanent Account Number), பான் கார்டு என்பது நிலையான வங்கி எண்ணாக உள்ளது. வர்த்தகம், பண பரிமாற்றம், முதலீடு உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகும். ஒரு தனி நபரின் பேரில் 1-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் இந்த பான் கார்டுக்கு கீழ் வந்துவிடும். அதுமட்டுமன்றி வங்கி பரிவர்த்தனைகள், வங்கி கடன் உள்ளிடவற்றையும் இந்த பான் கார்டு மூலம் எளிதாக கண்டறிய முடியும். பான் கார்டு இல்லையென்றால் வணிக ரீதியாக செய்யக்கூடிய செயல்களை செய்ய முடியாமல் போகலாம். எனவே பான் கார்டை முறையாக பராமரிப்பது அவசியம். பான் கார்டு இத்தகைய முக்கி ஆவணமாக உள்ள நிலையில், அது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அது குறித்து வருமான வரித்துறை விளக்கமும் அளித்துள்ளது.
இதையும் படிங்க : Blue Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய எவ்வளவு செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
பான் கார்டில் தந்தையின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டுமா?
பொதுவாக நாம் பெயர் எழுதும்போது தந்தை பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக பயன்படுத்துவோம். சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களிலும் கூட அவ்வாறே இடம் பெற்றிருக்கும். ஆனால், பான் கார்டில் பெயருக்கு அருகில் தந்தை பெயர் இல்லாமல் வெறும் இனிஷியம் மட்டும் இருந்தால் செல்லாது என்று இணையத்தில் தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த தகவல் அறிந்து பயனர்கள் குழுப்பத்திற்குள்ளாகினர். இந்த நிலையில், இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் குறித்து வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க : Aadhaar | செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!.. ஆதார் குறித்து வெளியான முக்கிய தகவல்!
இணையத்தில் பரவும் தகவலுக்கு வருமான வரித்துறை விளக்கம்
பான் கார்டுகளில் தந்தையின் முழுப்பெயர் இருக்க வேண்டும். மாறாக இனிஷியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு செல்லாது. தனதையின் பெயருக்கு பதில் வெறும் இனிஷியல் மட்டும் உள்ள கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை, “பான் கார்டுகளில் இனிஷியம் மட்டும் இருந்தாலும், இணையத்தில் தந்தையின் பெயரும் சேர்ந்தே இருக்கும். பான் கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தகவல் பொய்யானது. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களிலும் இனிஷியலுடன் இருக்கும் பான் கார்டு செல்லாது என எங்கும் தெரிவிக்கப்படவில்லை” என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.