Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு?.. வருமான வரித்துறை விளக்கம்!
Income Tax of India | வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
வருமான வரி தாக்கல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்த வேண்டும். அதன்படி 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல் பொய்யானது
2023 -24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நாளையுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது வருமான வரி இணையதளம் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் வருமான வரி தாக்கல் செய்வதற்காக காலக்கெடு ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பொய்யான தகவல் பரவி வருகிறது. இது குறித்து வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்தி பொய்யானது என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க : Budget 2024 Tax Slabs: வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. நிலையான வரி கழிவு அதிகரிப்பு!
பொதுமக்களுக்கு வருமான வரித்துறை அறிவுறை
வருமான வரி கணக்கு தாக்கல் சம்மந்தப்பட்ட தகவல்கள் மற்றும் அறிவிப்புகள், வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பதிவிடப்படும். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இதுபோன்ற பொய் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க : Income Tax : நெருங்கும் காலக்கெடு.. வருமான வரி செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதியே கடைசி
அதன்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்பதை வருமான வரித்துறை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது. எனவே வருமான வரி தாக்கல் செய்ய கூடியவர்கள் நாளைக்குள் (31.07.2024) வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம், அபராதம் உள்ளிட்ட சில சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.