5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Post Office FD : முதலீட்டை டபுளாக்கும் அசத்தல் அஞ்சலக திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் சிறப்பு வாய்ததாக கருதப்படுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், அவை மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன.

Post Office FD : முதலீட்டை டபுளாக்கும் அசத்தல் அஞ்சலக திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Dec 2024 16:51 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், சேமிப்பின் மூலம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறை மற்றும் நிதி சவால்களை  சரிசெய்துகொள்ளலாம். இதன் காரணமாகவே, பல பொருளாதார வல்லுநர்கள் மக்களை சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர். இந்த நிலையில், எந்த திட்டத்தில் முதலீடு செய்வது, எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். இந்த நிலையில், முதலீட்டை டபுளாக்கும் அரசின் அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டம்

பொதுமக்கள் சேமிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் சிறப்பு வாய்ததாக கருதப்படுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், அவை மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. இந்த திட்டங்களுக்கு அதில வட்டி வழங்கப்படும் நிலையில், ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அஞ்சல சேமிப்பு திட்டங்களில் நிலையான வைப்புநிதி திட்டம் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. காரணம், இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும். இந்த அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செவதன் மூலம் இரு மடங்கு லாபத்தை பெறுவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Ration Shop : ரேஷன் பொருட்கள் விற்பனையில் அதிரடி மாற்றம்.. இனி இந்த அளவில் தான் பொருட்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

அஞ்சலக FD திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அந்த தொகை திட்டத்தின் முடிவில் இரு மடங்காக மாற வாய்ப்புள்ளது. அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த 5 ஆண்டு கால முதலீட்டில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டியின் படி திட்டத்தின் முடிவில் ரூ.89,990 வட்டியாக கிடைக்கும். முதலீடு செய்த தொகை ரூ.2 லட்சம் மற்றும் வட்டி தொகை ரூ.89,900 இரண்டும் சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.2,89,990 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!

1 ஆண்டுக்கு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்

இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 2 ஆண்டுக்கான அஞ்சல நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.29,776 வட்டியாக கிடைக்கும். இதுவே இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு ஆண்டுக்கான அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் ரூ.14,161 வட்டியாக கிடைக்கும். முதலீடு செய்த தொகை ரூ.2 லட்சம் மற்றும் வட்டி தொகை ரூ.14,161 சேர்த்து மொத்தமாக ரூ.2,14,161 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News