5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

October Changes : கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. அக்டோபர் மாதம் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!

New Changes | அக்டோபர் மாதம் தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடி கார்டு, அகவிலைப்படி உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதம் முதல் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

October Changes : கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை.. அக்டோபர் மாதம் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 29 Sep 2024 18:26 PM

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி, செப்டம்பர் மாத தொடக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அக்டோபர் மாதம் தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு, கிரெடி கார்டு, அகவிலைப்படி உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அக்டோபர் மாதம் முதல் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : SL vs NZ 2nd Test Highlights: வெற்றிக்காக 15 வருட காத்திருப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இலங்கை அணி!

கேஸ் சிலிண்டர்

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த 4 மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.39 உயர்த்தப்பட்டு, ரூ.1,691 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக இக்ரா தரக் குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விடுப்பு தர மறுத்த மேனேஜர்.. அடுத்த 20 நிமிடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

ஆதார் கார்டு

முன்னதாக ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் வருமான வரி தாக்கல் செய்ய இனி ஆதார் பதிவு ஐடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டு

அக்டோபர் மாதம் முதல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டின் லாயல்டி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய விதியின்படி, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் SmartBuy பிளாட்ஃபார்மில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ரிவார்ட் பாயிண்டுகளை ரெடீம் செய்வதை, காலாண்டில் ஒரு பிராடெக்ட் என்ற அளவில் மட்டுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!

சிறுசேமிப்பு

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தேசிய சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் உள்ள தபால் அலுவலக சிறு சேமிப்பு கணக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும் நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Bank Holiday : அக்டோபர் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. முழு விவரம் இதோ!

வரி

மத்திய நேரடி வரிகள் வாரியம் நேரடி வரி விவாத் செ விஸ்வாஸ், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜூலை 22,2024 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் உள்ள புகார்களை தீர்க்கவும், வரி செலுத்துவோரை அனுமதித்து அதன் மூலம் வருமான வரி வழக்குகளைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Latest News