5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flipkart : 1 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் மக்கள்!

Auto Ride | கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் சேலை அறிவித்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் சேல், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சேலில், ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை அனைத்தும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Flipkart : 1 ரூபாய்க்கு ஆட்டோ சவாரி.. பிளிப்கார்ட் அதிரடி சலுகை.. ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் மக்கள்!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Idrees Abbas/SOPA Images/LightRocket via Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 02 Oct 2024 17:09 PM

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை முன்னிட்டு பெங்களூருவில் ரூ.1-க்கு ஆட்டோ சவாரி வழங்கப்பட்டு வருகிறது. பிளிப்கார்டின் இந்த அதிரடி சலுகை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த சேவை உண்மை தானா என ஆச்சரியத்தில் வாய் பிளக்கின்றனர். ஏற்கனவே பிளிப்கார்டின் பிக் பில்லியன் சேலில் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பிளிப்கார்டின் இந்த அதிரடி சலுகை மக்களை மேலும் மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதிரடி சலுகைகளுடன் அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் சேலை அறிவித்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் சேல், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சேலில், ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை அனைத்தும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐபோன், ஒன்பிளஸ், சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவையும் மிக குறைவாக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : Chennai Air Show: களைக்கட்டும் வான் சாகச நிகழ்ச்சிகள்.. சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிப்பு..

ரூ.1-க்கு ஆட்டோ சவாரி வழங்கும் பிளிப்கார்ட்

இந்த அதிரடி சலுகையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.1-க்கு ஆட்டோ சவாரிகளை வழங்கி வருகிறது. தனது யுபிஐ சேவையை விளம்பரப்படுத்தும் வகையில், பிளிப்கார்ட் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து இந்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நகரத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.1-க்கு சவாரி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி நகரத்தின் பல்வேறு இடங்களில் ஸ்டால் அமைத்து அதன் மூலம் ரூ.1-க்கான ஆட்டோ சேவையை பயன்படுத்தவும் பிளிப்கார்ட் வழிவகை செய்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பிளிப்கார்ட் ரூ.1-க்கு ஆட்டோ சேவை வழங்கும் அசத்தலான சலுகையை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

பிளிப்கார்டின் மற்ற சலுகைகள் என்ன?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் 43 இன்ச் கொண்ட LG OLED டிவி ரூ.47,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.27,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ.20,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இதேபோல ரூ.22,000 மதிப்புள்ள லெனோவா டேப் பிளஸ் தற்போது ரூ.17,000-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. மேலும் ஆப்பிள் மேக் புக் எம்1-க்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.93,000 ஆக உள்ள நிலையில் தற்போது வெறும் ரூ.53,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Crime: மகனை கொன்ற தந்தை.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவங்கள்!

பிளிப்கார்ட் நம்ப முடியாத இந்த சலுகையை அறிவித்துள்ள நிலையில், பலரும் அதிர்ச்சியில் இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பிளிப்கார்டின் இந்த ஆட்டோ சவாரி சலுகை மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News