Budget 2024 Tax Slabs: வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. நிலையான வரி கழிவு அதிகரிப்பு!
Budget 2024 Income Tax Rates: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலையான கழிவு தொகையானது 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வருமான வரி: நாடாளுமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ததன் மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதி, சமூக நீதி, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 9 விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள என நிர்மலா சீதாராமன் கூறினார். குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Also Read: தங்கம், வெள்ளி வரி குறைப்பு.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
புதிய வருமான வரி முறையில் மாற்றம்:
வருமான வரி செலுத்துவோரில் 3ல் 2 பங்கு பேர் புதிய வரி முறையில் (New Tax Regime) உள்ளனர். எனவே, புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது என்றார். அதன்படி, புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிலையான கழிவு தொகையானது 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் செலுத்த வேண்டிய வரியில் இருந்து ரூ.75,000 கழிக்கப்படும்.
மேலும், புதிய வருமான வரி முறையில் (New Tax Regime) புதிய வருமான வரி முறையில் அடிப்படை உச்ச வரம்பு மாற்றி அமைக்கப்படவில்லை என்ற போதிலும் அதற்கு அடுத்தடுத்த அடுக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி இல்லை என்று அறிவித்துள்ளார்.
ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 10 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20 சதவீதமும், ரூ. 15 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் 80c, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.
Also Read: தங்கம் முதல் வருமான வரி வரை.. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் தகவல்கள்