5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Budget 2024 Tax Slabs: மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு வரி கட்டணும்? பட்ஜெட் அறிவிப்பில் வெளியான தகவல்!

Budget 2024 Income Tax Rates: நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அப்போது பலரும் எதிர்பார்த்த வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Budget 2024 Tax Slabs: மாதச் சம்பளம் வாங்குபவர்கள் எவ்வளவு வரி கட்டணும்? பட்ஜெட் அறிவிப்பில் வெளியான தகவல்!
பட்ஜெட் 2024
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 Jul 2024 13:52 PM

வருமான வரி: நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அப்போது பலரும் எதிர்பார்த்த வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், வருமான வரி உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், வருமான வரியின் பழைய (Old Tax Regime) முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய (New Tax Regime) வரி முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பழைய (Old Tax Regime) மற்றும் புதிய (New Tax Regime) வருமான வரி முறை நடைமுறையில் உள்ளது. தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். இதில் பழைய வருமான வரிமுறையில் பல்வேறு சலுகைகள் அப்படியே தொடர்கின்றனர்.

ஆனால், புதிய வரி முறையில் வரி செலுத்துவோர் 80c, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. அதேபோல, புதிய வரி முறையில் விரி செலுத்துவோருக்கு கழிவுத்தொகை ரூ.50,000 கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகைக்கான வருமான வரி கணக்கிடப்படும்.  ஆனால், வரும் நிதியாண்டு முதல் தனிநபர் வருமான வரியில் நிலையான கழிவு தொகை 50,000 ரூபாயில் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் செலுத்த வேண்டிய வரியில் இருந்து ரூ.75,000 கழிக்கப்படும்.

Also Read: வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.. நிலையான வரி கழிவு அதிகரிப்பு!

புதிய வரிமுறை:

வரும் நிதியாண்டு முதல்  புதிய வரி முறையில் (New Tax Regime) ரூ. 3 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. ரூ. 3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை சம்பளம் வாக்கினால் ரூ.5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ரூ. 7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ. 10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 15 சதவீதமும், ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20 சதவீதமும், ரூ.15 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினார் 30 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

இதற்கு முன்பாக, புதிய வருமான வரி முறையில் அடிப்படை உச்ச வரம்பு மாற்றி அமைக்கப்படவில்லை என்ற போதிலும் அதற்கு அடுத்தடுத்த அடுக்குகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டி இருந்தது. இப்போது ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.9 லட்சம் வருமான என்றால் 10 சதவீத வரி செலுத்தி வேண்டியிருந்த நிலையில், இப்போது ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரண்டு அடுக்குகளில் ஆண்டு வருமானம் வாங்குபவர்கள் பெரியளவில் பலன் பெறுவார்கள்.

பழைய வரி முறை (Old Tax Regime):

காலம் காலமாக அரசின் வரி சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு வந்த பழைய வரி (Old Tax Regime) முறையை பயன்படுத்துவோருக்கு எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் மூலம் மத்திய அரசு மக்களை புதிய வருமான வரியின் கீழ் கொண்டு வர முயற்சித்து வருகிறது. பழைய வரி முறையில் ரூ.2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால், 2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்கினால் 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ.10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இதில் 80c, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியும். ரூ. 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80c, 80D போன்ற சலுகைகள் மூலம் வரி விலக்கு அதிகமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தங்கம், வெள்ளி வரி குறைப்பு.. பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Latest News