Amazon Freedom Festival : அதிரடி ஆஃபர்களுடன் வரப்போகும் அமேசான் ஃப்ரீடம் சேல்.. எப்போது தெரியுமா.. தேதிய குறிச்சு வச்சுக்கோங்க!
Amazon Sale | இந்தியாவில் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அமேசான் நிறுவனம் ஃப்ரீடம் சேலை அறிவிக்கும். இதில் பல்வேறு பொருட்கள் விலை குறைவாகவும், சிறந்த தள்ளுபடியிலும் கிடைக்கும்.
அமேசான் ஃப்ரீடம் சேல் : ஆடி மாதம் வந்துவிட்டாலே தள்ளுபடிக்கு பஞ்சம் இருக்காது. துணிக்கடைகள் முதல் நகைக் கடைகள் வரை எல்லா இடத்திலும் ஆடி தள்ளுபடி தான். இதன் காரணமாக கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் தொடங்கிவிட்ட நிலையில், பல கடைகள் தள்ளுபடிகளை வாரி வழங்கி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க அமேசான் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத ஃப்ரீடம் சேல் விரைவில் வரவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆடி தள்ளுபடியுன், அமேசான் ஃப்ரீடம் சேலும் இணைந்துவரவுள்ள நிலையில் குறைந்த விலையில் பொருட்களை வாங்க, இது மக்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
அமேசான் ஃப்ரீடம் சேல் விற்பனை
இந்தியாவில் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அமேசான் நிறுவனம் ஃப்ரீடம் சேலை அறிவிக்கும். இதில் பல்வேறு பொருட்கள் விலை குறைவாகவும், சிறந்த தள்ளுபடியிலும் கிடைக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் டே விற்பனை நடந்தது. இதில் ஐ போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஐ போன் உள்ளிட்ட முன்னணி மொபைல் போன்கள் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்பட்டன. அமேசான் ப்ரைம் டே சேல் முடிந்து சில நாட்களே ஆன நிலையில், தனது ஃப்ரீடம் சேலை அறிவித்துள்ளது அமேசான்.
இதையும் படிங்க : Top 10 Countries : உலகில் பொருளாதாரத்தில் சிறந்த டாப் 5 நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
அமேசான் ஃப்ரீடம் சேல் எப்போது?
அமேசான் ப்ரீடம் சேல் எப்போது தொடங்கவுள்ளது என்பது குறித்து நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தனது மொபைல் செயலி மற்றும் வளைத்தளங்களில் அமேசான் ஃப்ரீடம் சேல் 2024 கம்மிங் சூன் என விளம்பரம் செய்துள்ளது. இதனால் விரைவில் அமேசான் ஃப்ரீடம் சேல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஃப்ரீடம் சேல் எப்போது தொடங்கும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஃபாஸ்டேக் வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!
என்ன சிறப்பு அம்சம்
இந்த அமேசான் ஃப்ரீடம் சேலில் முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்கள் முதல் வீட்டு உபயோக பொருட்களை வரை அதிரடி சலுகைகளுடன் அமேசான் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.