5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.2000 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Rs.2000 Currency Note: நவம்பர் 08 2016 ஆம் ஆண்டு இந்த 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு நவம்பர் 11 முதல் புழக்கத்தில் விடப்பட்டது. 2000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் தடை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மேலாகியும் இன்றும் மக்களிடம் இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏழாயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கோப்புப் படம்
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 02 Oct 2024 18:51 PM

2000 ரூபாய் நோட்டுகள் நாட்டில் தடை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மேலாகியும் இன்றும் மக்களிடம் இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏழாயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்த அப்டேட்டை அக்டோபர் முதல் நாளில் தெரிவித்தது. புழக்கத்தில் இருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் வாபஸ் பெறப்பட்டதில் 98 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

2000 ரூபாயின் வெளியீடு:

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக 2016ஆம் ஆண்டு நவம்பர் 08ஆம் தேதி இந்த 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு நவம்பர் 11 முதல் புழக்கத்தில் விடப்பட்டது. இந்த 2000 ரூபாய் நோட்டுகள் வெளியான புதிதில் இந்த நோட்டுக்குள் சிப் இருப்பதாகவும் அந்த சிப் அந்த நோட்டு செல்லும் இடமெல்லாம் கண்காணிக்கும் எனவும் கருப்பு பணங்கள் பதுங்கி இருந்தால் எளிதில் காட்டிக் கொடுத்து விடும் எனவும் வதந்திகள் பரவின.

அன்றைய தினத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8, 2016 அன்று தடை செய்யப்பட்டது. அதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் இந்தியாவின் அதிக மதிப்புமிக்க கரன்சி நோட்டாக இருந்தது. ஆயிரம் ரூபாய் முடக்கத்திற்கு பின் 2000 ரூபாய் மதிப்புமிக்க கரன்சி நோட்டாக இருந்தது.

ஆனால் 2000 ரூபாயும் முடக்கப்பட்ட பின்பு இப்பொழுது இந்தியாவின் அதிக மதிப்புமிக்க கரன்சி நோட்டாக 500 ரூபாய் இருக்கிறது.

புழக்கத்தில் உள்ள மீமுள்ள 2% நோட்டுகள்:

நேற்றைய தினம் (அக்டோபர் 1, 2024) மத்திய வங்கி 2000 ரூபாய் நோட்டுகளின் பற்றிய தரவை வெளியிட்டுள்ளது. அதில் 98 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7,117 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் இன்னும் புழக்கத்தில் விடுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த ஆரம்பக் காலங்களில் மக்கள் வேகமாக அதன் நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்தனர். ஆனால் இப்போது மிகக் குறைந்த அளவிலேயே வங்கிக்கு திரும்புகிறது.

வங்கிக்கு திரும்பிய நோட்டுகள்:

ஜூலை 1, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கி பகிர்ந்துள்ள தகவலின் படி, ரூ.7581 ஒன்னு கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் உள்ளன.

இந்த இரண்டு மாதங்களில் ரூ.320 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாகவும் தற்போது அக்டோபர் மாத தரவுகளை பார்க்கும் போது நோட்டு திரும்ப பெறுவதற்கான வேகம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு மே 2023 இல் இந்த நோட்டுகள் தடை செய்யப்பட்டபோது சந்தையில் ரூ.3.56 லட்சம் கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுகள் இருந்தன.

ஆனால் டிசம்பர் 29, 2023 நிலவரப்படி இந்த எண்ணிக்கை ரூ.9,330 கோடியாக குறைந்துள்ளது.

Also Read: PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

2000 ரூபாய் நோட்டுகள் எப்போது நிறுத்தப்பட்டது?

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மதிப்பு அதிகம் உள்ள இந்த 2000 ரூபாய் நோட்டுகள் மே 23, 2023 அன்று திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய வங்கி மே 23, 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரை அவகாசம் அளித்தது.

2000 ரூபாய் நோட்டுக்கு மாற்று நோட்டுகள் உள்ளூர் வங்கிகள் மற்றும் 19 இந்திய ரிசர்வ் வங்கி பிராந்திய அலுவலங்களில் கிடைத்தது. இருப்பினும் இந்தக் காலக்கெடு தொடர்ந்து நீடிக்கப்பட்டது.

இப்பொழுதும் டெபாசிட் செய்யலாம்:

இப்பொழுதும் கூட இந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலும். உள்ளூர் வங்கிகளில் மாற்ற முடியவில்லை என்றாலும் கூட வாபஸ் பெறப்பட்ட இந்த நோட்டுகளை அகமதாபாத், பெங்களூரு, பேலாப்பூர், கோபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ ஆகிய 19 இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தபால் மூலமாகவும் இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

Also Read: Ration Shop : இனி வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.. எல்லாமே ரேஷன் கடையில் வரப்போகுது.. அரசின் அதிரடி திட்டம்!

Latest News