5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PMV EV Car : ரூ.4 லட்சத்தில் இந்த மின்சார கார்.. மிடில் கிளாஸ் கனவை நினைவாக்கும் புது மாடல்!

Electric Car : EV கார்கள் திரளாக நுகர்வோருக்கு கிடைக்கின்றன. ஆனால் இந்த கார்களில் முன்னணி நிறுவனங்களின் கார்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், இவி கார்களின் விலையும் அதிகமாக இருப்பதால் நடுத்தர மக்கள், இவி கார்களைப் பார்க்கவே பயப்படுகிறார்கள்.

PMV EV Car : ரூ.4 லட்சத்தில் இந்த மின்சார கார்.. மிடில் கிளாஸ் கனவை நினைவாக்கும் புது மாடல்!
மின்சார கார்
Follow Us
c-murugadoss
CMDoss | Published: 22 Jul 2024 15:49 PM

மின்சார கார் : சொந்தமாக கார் வைத்திருப்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வாழ்கால ஆசைதான். ஆனால் விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் கார் வாங்கும் எண்ணத்தை கைவிடுகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தைக்கு வந்து குவிகின்றன. குறிப்பாக, EV கார்கள் திரளாக நுகர்வோருக்கு கிடைக்கின்றன. ஆனால் இந்த கார்களில் முன்னணி நிறுவனங்களின் கார்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், இவி கார்களின் விலையும் அதிகமாக இருப்பதால் நடுத்தர மக்கள், இவி கார்களைப் பார்க்கவே பயப்படுகிறார்கள். ஆனால் ஸ்டார்ட்அப் PMV நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் EV காரை வெளியிட்டுள்ளது. வெறும் ரூ.4 லட்சத்தில் இந்த மின்சார கார் கிடைக்கிறது

மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் பர்சனல் மொபிலிட்டி வெஹிக்கிள் (பிஎம்வி எலக்ட்ரிக்) நாட்டிலேயே மலிவான மின்சார காரை உருவாக்கியுள்ளது. PMV EAS-E என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த EV கார் மைக்ரோ எலக்ட்ரிக் கார் என சந்தை வல்லுனர்களால் கூறப்படுகிறது. PMV EVயின் விலை ரூ.4 முதல் 5 லட்சம் வரை இருக்கும். இந்த இ-காரின் நீளம் 2915 மிமீ மட்டுமே. இந்த EVயின் விலை ரூ. 2000 சிறிய தொகையுடன் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை ஓடும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த மின்சார காரை 15 ஆம்ப் சாக்கெட்டில் இருந்து சார்ஜ் செய்ய முடியும். இந்த காரை வெறும் 4 மணி நேரத்தில் முழுமையாக செய்துவிட முடியும்.

Also Read : கேஸ் மூலம் ஓடும் பைக்.. பஜாஜ் அறிமுகம் செய்த ஃப்ரீடம் 125 CNG

சந்தையில் இருக்கும் கார்களுக்கு PMV EV கார் கடும் போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த கார் Tata Tiago EV மற்றும் MG Comet EVயை விட குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் காரை அறிமுகப்படுத்தியிருந்தாலும், டெலிவரி தேதிகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்த கார் கிடைக்கும் பட்சத்தில் முன்னணி நிறுவனங்களின் EV கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்க வாய்ப்புள்ளது.

BYD எலெக்ட்ரிக் கார்

இவ்வளவு விலை குறைவாக வேண்டாம், கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் பரவாயில்லை என நினைப்பவர்களுக்கு பிரபல சீன கார் தயாரிப்பு நிறுவனமான BYD புது காரை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் படிப்படியாக விரிவடைந்து வரும் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு புதிய காரை BYD நிறுவனம் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 Atto 3 EV அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் மூன்று புதிய வகைகளில் கிடைக்கிறது. இந்த வரிசையில் டைனமிக், பிரீமியம் மற்றும் சுப்பீரியர் என மூன்று வகைகள் உள்ளன. டைனமிக் மாறுபாட்டின் ஆரம்ப விலை ரூ. 24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) அதே சமயம் உயர்ந்த வகையின் அதிகபட்ச விலை ரூ. 33.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Latest News