5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Second Hand Car: செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போறீங்களா? – கவனிக்க வேண்டிய விஷயம்!

Second Hand Cars: விலை உயர்ந்த சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் அந்த கார்களின் விலை அதிகளவாக இருப்பதால் அந்த கனவு கனவாகவே போய் விடுகிறது. செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது.. செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவது உங்களுக்கு சரியானதா இல்லையா என்பதை உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

Second Hand Car: செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போறீங்களா? – கவனிக்க வேண்டிய விஷயம்!
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 28 Oct 2024 10:43 AM

விலை உயர்ந்த சொகுசு கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் அந்த கார்களின் விலை அதிகளவாக இருப்பதால் அந்த கனவு கனவாகவே போய் விடுகிறது. அதன் காரணமாகவே பல செகண்ட் ஹேண்ட் சேல்ஸ் கார்களை வாங்க முடிவு செய்கிறார்கள். இது குறைந்த பட்ஜெட்டில் சொகுசு காரை வாங்குவதற்கு எளிய முறையாக இருக்கிறது. செகண்ட் ஹேண்ட் கார் மூலம் நீங்கள் விரும்பும் சொகுசு காரை மலிவாக வாங்கிவிடலாம். ஆனால் அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது.  செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவது உங்களுக்கு சரியானதா இல்லையா என்பதை உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் முடிவு செய்ய வேண்டும். செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவதன் நன்மைகள்:

மலிவு: செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, புதிய காரை விட குறைவான விலையில் அதை வாங்கலாம். இன்றைய நிலையில் ஒரு புதிய சொகுசு காரின் விலை மிக அதிகமாக உள்ளது. அதை வாங்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவழிக்க நேரிடும். ஆனால் செகண்ட் ஹேண்ட்ஸ் காரை வாங்குவதன் மூலம் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப விரும்புகிற சொகுசு காரை வாங்க முடியும்.

Also Read: Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸில் ஜாலி ரைடு போன ஆகாஷ் அம்பானி… விலை எவ்வளவு தெரியுமா?

சிறந்த அம்சங்கள்: சொகுசு கார்கள் உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் பல சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. இதில் பவர் விண்டோ, பவர் ஸ்டீயரிங், சன்ரூஃப், லெதர் இருக்கைகள், நேவிகேஷன் சிஸ்டம், மியூசிக் சிஸ்டம் மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்: சொகுசு கார்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் பல பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. ஏர்பேக்குகள், ஆண்டி-லாக் பிரேக் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (ஈபிடி), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ஈஎஸ்சி), டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (டிசிஎஸ்) மற்றும் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இந்த அம்சங்களில் சில.

பிற நன்மை: சொகுசு கார்களில் பயன்படுத்தப்படும் பாகங்கள் மற்றும் பொருட்களின் தரம் மிகவும் நன்றாக இருக்கும். எனவே, ஒரு செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் மிகவும் நீடித்த உழைப்பை தரக்கூடியது.

செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவதால் ஏற்படும் தீமைகள்:

விலையுயர்ந்த பராமரிப்பு: சொகுசு கார்களை பராமரிப்பது மிகவும் விலை உயர்ந்தது. காரை அவ்வப்போது சர்வீஸ் செய்யவும், ரிப்பேர் செய்யவும் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, விலை உயர்ந்த பராமரிப்புக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

கார் பாகங்கள்: சொகுசு கார்களுக்கான உதிரி பாகங்கள் பற்றாக்குறையாக இருக்கலாம். ஏதாவது சேதமடைந்தால், அதன் மாற்று பாகங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது.

மைலேஜ்: சொகுசு கார்கள் மைலேஜ் மிகக் குறைவு. அதிக பெட்ரோல் குடிக்கும். சொகுசு கார் வாங்கினால் எரி பொருளுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டி வரும்.

Also Read: Tata Motors: இந்த கார் செம பாதுகாப்பு.. ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற டாடா‌ கர்வ் மாடல்கள்!

பழைய மாடல்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்கினால், பழைய மாடலை வாங்க வேண்டும். இதன் காரணமாக, புதிய மாடலில் கிடைக்கும் சில அம்சங்களின் பலனை நீங்கள் பெறமாட்டீர்கள்.

செகண்ட் ஹேண்ட் சொகுசு கார் வாங்குவதால் ஏற்படும் சாதக பாதகங்களை இந்த தகவலை படித்து தெரிந்து கொள்ளலாம். உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து காரை முழுமையாக ஆய்வு செய்வது சிறந்த செகண்ட் ஹேண்ட் சொகுசு காரை வாங்க உதவும்.

Latest News