5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Citroen C3 கார் .. 2024 மாடல் எப்படி? புதிய மாற்றங்கள் என்னென்ன?

Citroen India New Car Launch: 2024 Citroen C3 Aircross இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அது மலிவு விலையில் சந்தைக்கு வர இருக்கிறது. அதற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. எனவே சந்தையில் நிலவும் போட்டியில் புதிய C3 Air cross SUV பிரிவில் வாடிக்கையாளர்களின்‌ தேர்வாக இருக்கும்.

Citroen C3 கார் .. 2024 மாடல் எப்படி? புதிய மாற்றங்கள் என்னென்ன?
2024 Citroen C3 Aircross Car (Photo Credit: CarWale)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 02 Oct 2024 16:04 PM

Citroen India நிறுவனம் C3 Air cross மாடலை மேம்படுத்தப்பட்ட வசதி, பாதுகாப்பு மற்றும் இந்திய வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பத்துடன் வெளியிட்டுள்ளது. 2024 Citroen C3 Air cross இக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் டெலிவரிகள் அக்டோபர் 8 முதல் தொடங்கப்பட இருக்கிறது. SUV இப்போது பல மாற்றங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த மாடல் மிகவும் மலிவாகவும் நடைமுறைக்கு சாத்தியப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே சந்தையில் நிலவும் போட்டியில் புதிய C3 Air cross SUV பிரிவில் வாடிக்கையாளர்களின்‌ தேர்வாக இருக்கும். மேலும் இதில் இருக்கும் புதிய மாற்றங்கள் பற்றியும் பார்க்கலாம்.

புதிய தொடக்க விலை ₹8.49 லட்சம்:

Citroen India இப்பொழுது வெளியிட இருக்கும் C3 Air cross காரின் விலையை குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.8.49 லட்சமாக நிர்ணயித்து உள்ளது. இந்த பிராண்ட் இப்போது SUV ரக புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தி எனவே இந்த நிறுவனம் இப்பொழுது முன் பதிவுகளை ஏற்க தொடங்கி உள்ளது.

மேலும் இதற்கான டெலிவரிகள் அக்டோபர் 8 2024 முதல் தொடங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்:

Citroen C3 Air cross SUV இப்போது LED ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப்கள் மற்றும் காலநிலை கட்டுப்பாட்டுடன் கூடிய தானியங்கி ஏர் கண்டிஷனிங் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் இப்போது கதவுகளில் பின்புற பவர் ஜன்னல் சுவிட்சுகள், முன்பக்கத்தில் கிராப் கைப்பிடிகள், பவர் ஃபோல்டிங் ORVM கள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த Air cross வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ‌5 மற்றும் 5+2 இருக்கை வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

Also Read: 5 மாடல் SUV கார்களுக்கு ரூ.1.80 லட்சம் வரை தள்ளுபடி.. விவரம்!

வலுவூட்டப்பட்ட பாதுகாப்பு:

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக ஆறு ஏர் பேக்குகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ISOFIX இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் 40 கற்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் Air cross சந்தைக்கு வர இருக்கிறது.

மேலும் இது ஒரு மின்னணு நிலைத்தன்மை திட்டம், டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் மென்மையாகவும் நம்பிக்கையாகவும் மற்றும் மேம்பட்ட அனுபவத்திற்காகவும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகியவற்றுடன் வருகிறது.

புதிய பவர்டிரெய்ன்:

Citroen C3 Air cross இப்போது 82 Hp உச்ச ஆற்றல் வெளியீடு மற்றும் 115 Nm அதிகபட்ச விசையுடன் Pure tech 82 இன்ஜினை பெற்றுள்ளது.‌ மேலும் இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் வருகிறது.‌

மாறுபாடுகள் மற்றும் விலைகள்:

புதுப்பிக்கப்பட்ட C3 Air cross You, Plus and Max என மொத்தம் மூன்று வகைகளில் வருகிறது. மொத்தம் ஆறு டிரிம் தேர்வுகளை வழங்குகிறது.

  • 2024 Citroen C3 Air cross 1.2 NA You – ரூ.8.49 லட்சம்
  • 2024 Citroen C3 Air cross 1.2 NA PLUS – ரூ.9.99 லட்சம்
  • 2024 Citroen C3 Air cross 1.2 TURBO PLUS – ரூ.11.95 லட்சம்
  • 2024 Citroen C3 Air cross 1.2 TURBO AT PLUS – ரூ.13.25 லட்சம்
  • 2024 Citroen C3 Air cross 1.2 TURBO MAX – ரூ.12.70 லட்சம்
  • 2024 Citroen C3 Air cross 1.2. TURBO AT MAX – ரூ.13.99 லட்சம்

ரூ.35,000 கூடுதல் விலையில் 5+2 இருக்கை வசதியை பெறலாம்.

1919 ஆண்டு பிரான்சில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் தன் விற்பனை தளத்தை விரிவு படுத்தியது. இதுவரை 9,488 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஹேட்ச்பேக்‌ ரகத்தில் C3 மற்றும் eC3 மாடல்களும் SUV ரகத்தில் C3 Air cross, C5 Air cross மற்றும் Basalt மாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளது.

Also Read: Top CNG Cars: பட்ஜெட் விலையில் சிறந்த மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள்..!

Latest News