5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
user

Aarthi Govindaraman

Chief Sub-Editor

aarthi.govindaraman@tv9.com

2016ம் ஆண்டு ஊடகத் துறையில் பயணத்தை தொடங்கியவர். 9 ஆண்டு ஊடக பயணத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிகழும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் கொடுத்தவர். சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், பெரும் தலைவர்களான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதியின் மறைவு, பேரிடர் செய்திகள், சுகாதாரம், கொரோனா பெருந்தொற்று தொடர்பான செய்திகளை களத்தில் இருந்து வழங்கிய அனுபவம் கொண்டவர். கள செய்தியாளர் டூ டிஜிட்டல் துறையில் கால்பதித்து செய்திகளை வழங்கி வருபவர். தற்போது TamilTV9 இணையதளப்பிரிவில் Chief Sub-Editor -ஆக பணியாற்றி வருகிறார்.

Read More
Fengal Cyclone: நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் ஃபெங்ஞ்சல் புயல்.. மயிலத்தில் பதிவான அதிகபட்ச மழை..

Fengal Cyclone: நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் ஃபெங்ஞ்சல் புயல்.. மயிலத்தில் பதிவான அதிகபட்ச மழை..

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வட கடலோரப் பகுதிகளில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று, டிசம்பர் 1, 2024 அதிகாலை 0230 மணி நிலவரப்படி 12.0°N மற்றும் தீர்க்கரேகை 79.8°E, புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Gas Cylinder Price: மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை.. அதிர்ச்சியில் மக்கள்..

Gas Cylinder Price: மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை.. அதிர்ச்சியில் மக்கள்..

வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து விலை மாற்றமில்லாமல் இருப்பது இல்லத்தரசிகள் நிம்மது அடைந்து வரும் நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வது உணவகங்கள், சிறு தொழில்கள் வரையிலான பல்வேவறு துறைகளில் கடுமையாக பாதிக்கும். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

Fengal Cyclone: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..

Fengal Cyclone: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல்.. 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..

Weather Alert: நாளை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIV Day: எய்ட்ஸ் இல்லா மாநிலத்தை உருவாக்குவோம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

HIV Day: எய்ட்ஸ் இல்லா மாநிலத்தை உருவாக்குவோம் – முதலமைச்சர் ஸ்டாலின்..

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடுச் சங்கம், இந்த ஆண்டின் சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு, மாநில மற்றும் மாவட்ட அளவில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த "ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12, 2024" வரையிலான நாட்களில் பொதுமக்களுக்குத் தீவிர விழிப்புணர்வு பிரச்சார சேவையினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Fengal Cyclone: 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?

Fengal Cyclone: 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?

Rain Alert: இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. விமான சேவை முதல் பேருந்து சேவைகள் வரை பாதிப்பு..

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. விமான சேவை முதல் பேருந்து சேவைகள் வரை பாதிப்பு..

Weather Report: இன்று மாலை, மாலையில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PM Modi: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது – பிரதமர் மோடி..

PM Modi: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது – பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பதிவில், “ மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்” என குறிப்பிட்டுள்ளார். ராஜ்பவனுக்குச் செல்வதற்கு முன் பாஜக அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மதிய உணவும் சாப்பிட்டார்.

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. மீண்டும் பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள்..

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. மீண்டும் பார்க்கிங் ஏரியாவாக மாறிய மேம்பாலங்கள்..

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தேங்கும் மழைநீர் காரணமாக வாகனங்கள் குறிப்பாக கார்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாய் மாறியது. வெள்ளப்பெருக்கின் போது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் காலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல்.. சென்னைக்கு மழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்..

Rain Alert: நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது. இந்த புயல் தற்சமயம் 7 கி.மி வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு சுமார் 190 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் அல்லது மாலை சென்னை அருகே மாமல்லப்புரம் மற்றும் காரைக்கால் புதுவை அருகே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fengal cyclone: அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்

Fengal cyclone: அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்

Tamil Nadu Rains : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,

School Leave: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. இன்று எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

School Leave: ஃபெஞ்சல் புயல் எதிரொலி.. இன்று எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

Weather Report: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fengal Cyclone: சென்னைக்கு 190 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. விடிய விடிய ஆட்டம் காட்டும் மழை..

Fengal Cyclone: சென்னைக்கு 190 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபெஞ்சல் புயல்.. விடிய விடிய ஆட்டம் காட்டும் மழை..

Weather Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 23 - 24° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.